ஆட்டுக்கால் பெப்பர் பாயா
2023-01-03@ 17:09:16

தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கால் – 2
தக்காளி – 4
வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
மிளகுத்தூள் – 4 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது – 4 ஸ்பூன்
தேங்காய்ப்பால் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும். பின் குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். அதன் பிறகு மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். 10 விசில் கழித்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும். பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
Tags:
ஆட்டுக்கால் பெப்பர் பாயாமேலும் செய்திகள்
சிவப்பரிசி புட்டு
செட்டிநாட்டு உப்புக்கறி வறுவல்
செட்டிநாடு சிக்கன் கிரேவி
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
உருளைக்கிழங்கு வறுவல்
வாழைப்பூ அடை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி