கிடாக்கறி கிராமத்து வறுவல்
2022-12-27@ 16:04:44

தேவையானவை:
மட்டன் - 1 கிலோ
தக்காளி - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லித் தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு.
கறிவேப்பிலை,
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
மிளகு - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 4
வறுத்து அரைக்க: பட்டை - 4
லவங்கம் - 6
சோம்பு, சீரகம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 15 பல்
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
பொட்டுக் கடலை - 2 மேஜைக்கரண்டி.
பக்குவம்:
இளம் ஆட்டுக்கறியை உப்பு, மஞ்சள் தூள், மிளகாய், கொத்தமல்லி தூளுடன் தண்ணீர் சேர்த்து பஞ்சு போல் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து சிறிதளவு இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாயை கீறியது போல சேர்த்து வதக்கி வேகவைத்த ஆட்டுக்கறியைச் சேர்த்து நன்கு கிளறவும். வாசம் வந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து லேசாக எண்ணெய் மிதக்கும் வரை பிரட்டவும். இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
மேலும் செய்திகள்
நாட்டுக்கோழி வறுவல்
மட்டன் எலும்பு குழம்பு
தேங்காய் மட்டன் குழம்பு
தேங்காய் மட்டன் குழம்பு
மொச்சைப்பயிறு கருவாட்டுக் குழம்பு
எலுமிச்சை ரசம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!