தினை வெனிலா ஸ்பாஞ்ச் கேக்
2022-12-27@ 15:29:09

தேவையானவை:
தினை மாவு - 35 கிராம்
கோதுமை மாவு - 35 கிராம்
உப்பில்லாத வெண்ணெய் - 30 கிராம்
சர்க்கரை - 60 கிராம்
பேக்கிங்பவுடர் - கால் தேக்கரண்டி
உப்புத்தண்ணீர் - 1 தேக்கரண்டி (ஒரு டீஸ்பூன் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைக் கரைக்கவும்)
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வெனிலா எசென்ஸ் மற்றும் பைனாப்பிள் எசென்ஸ் - 1 தேக்கரண்டி
முட்டை - 1.
செய்முறை:
தினையை 4 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீர் இறுத்து வெயிலில் லேசாக உலர்த்தி எடுக்கவும். இதனை வாணலியில் சேர்த்து ஈரம் போக லேசாக வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இனி, தினைமாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து சலித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையைத் தனியாக எடுத்து சிறிது நேரத்துக்கு நன்றாகக் கலக்கவும். பிறகு முட்டை சேர்த்து ஹேண்ட் பீட்டரால் நன்கு அடிக்கவும். இத்துடன் உப்புத்தண்ணீர் மற்றும் எண்ணெயைச் சேர்த்துக் கலக்கி சலித்த மாவை ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பொங்கி வரும் வரை கலக்கவும். பின்னர் வெனிலா மற்றும் பைனாப்பிள் எசன்ஸை இதனுடன் ஊற்றி விடவும். கலவை தோசை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும். எல்லாவற்றையும் ரெடி செய்தவுடன், கேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெயைத் தடவி அதன் மேல் சிறிது கோதுமைமாவு தூவி பாத்திரம் முழுக்கப் பரப்பி விடவும். அதன் மேல் கேக் மாவைக் சமமாக ஊற்ற வேண்டும். இதை குக்கரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைத்து இறக்கி விடவும். கேக் ஆறியதும் க்ரீம் தடவி அழகுபடுத்தலாம். இப்போது சுவையான தினை கேக் தயார்.
மேலும் செய்திகள்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!