SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரவள்ளிக் கிழங்கு ரோஸ்ட்

2022-12-13@ 18:00:31

தேவையானவை:

மரவள்ளிக் கிழங்கு - ½ கிலோ,
பச்சரிசி - ¼ கிலோ,
தேங்காய் துருவல் - ¼ கப்,
மிளகாய் வற்றல் - 6,
பெரிய வெங்காயம் - 100 கிராம்,
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்,
இஞ்சி - சிறு துண்டு,
பெருங்காய தூள் - ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கேற்ப.


செய்முறை:

மரவள்ளிக் கிழங்கை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து பின் அரிசியுடன் மரவள்ளிக்கிழங்கும், துருவிய தேங்காய், இஞ்சி, மிளகாய்வற்றல், வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை என எல்லாவற்றையும் கிரைண்டரிலோ (அ) ஆட்டுக்கல்லிலோ ேபாட்டு அடைக்கு அரைப்பது போல் விழுதாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவிக் காயவைத்து பின் ஒரு கரண்டி மாவை விட்டு வேகவிடவும். அதில் சிறிது எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுக்கவும். இந்த மரவள்ளிக் கிழங்கு ரோஸ்ட்டுக்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்