SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிக்காஹ் பிரியாணி

2022-12-08@ 17:02:08

தேவையான பொருட்கள்:

பிரியாணி அரிசி - 200 கிராம்,
மட்டன் - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 6,
இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 5
(நைசாக அரைக்கவும்),
பப்பாளி - 1 சிறிய துண்டு
(நைசாக அரைக்கவும் -
1/2 மேசைக்கரண்டி அளவு),
தயிர் - 1/2 கப்,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 4,
ஏலக்காய் - 3,
புதினா - 1 கைப்பிடி,
பிரிஞ்சி இலை - 1,
எலுமிச்சம்பழச் சாறு - 1 மேசைக்கரண்டி,
ஜாதிக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி,
பால் - 2 மேசைக்கரண்டி,
குங்குமப்பூ - சிறிது,
முந்திரி - 6,
எண்ணெய் - 1/4 கப்,
நெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


பக்குவம்:

வெங்காயம், புதினாவைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாவற்றிலும் பாதியை எடுத்து அரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய மட்டன், அரைத்த பொடி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலா, வெங்காய விழுது, பப்பாளி விழுது, பிரியாணி இலை, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிது புதினா, 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி 3 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியைக் கழுவி தனியாக அரைமணி நேரம் ஊற வைக்கவும். மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிது எண்ணெய் சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி முக்கால் பதம் வேகவைத்து வடித்து சிறிது உப்பு கலந்து வைக்கவும். வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தனியாக வைக்கவும்.

பெரிய பாத்திரத்தில் நெய், எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் ஊற வைத்த மட்டனை அப்படியே கொட்டி வதக்கவும். நன்கு வதங்கிய பின் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். மட்டன் நன்கு வேக வேண்டும். கொஞ்சம் கிரேவியாக இருக்க வேண்டும். அதில் வேகவைத்த சாதம், வதக்கிய வெங்காயம், புதினா, எழுமிச்சம்பழச் சாறு சேர்த்து கலக்கி மூடி தம்மில் வைக்கவும். பிரியாணி வெந்ததும் பாலில் குங்குமப் பூவை கரைத்து தெளித்து மூடி வைக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து மேலே தூவி பரிமாற சூப்பர், சுவையான ஹைதராபாத் பிரியாணி ரெடி. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணிப் பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தால் தம் ஆகிவிடும். கத்தரிக்காய் கிரேவி, ஆனியன் ரெய்த்தாவுடன் பரிமாற, சுவை கூடும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்