ரவை அடை
2022-12-07@ 17:03:58

தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப்,
கோதுமை மாவு- 1 கப்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2,
இஞ்சி துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது,
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்,
கறிவேப்பிலை
கொத்தமல்லித்தழை தேவையான அளவு,
தயிர் – 1/4 கப்,
உப்பு தேவையான அளவு,
நல்லெண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை:
(கோதுமை மாவு 200 கிராம், ரவை 200 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.) ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மேலே சொன்ன அளவுகளில் எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு, தண்ணீர் ஊற்றாமல் முதலில் எல்லா பொருட்களையும் கலந்து விட்டு விடுங்கள். அதன் பின்பு ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த கலவையோடு தண்ணீரைத் தெளித்து நன்றாக, மாவை அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அடை தோசை ஊற்ற போவது கிடையாது. மாவை கெட்டியான பதத்தில் பிசைந்து ஒவ்வொரு, சிறிய உருண்டைகளாக உருட்டி, ஒரு வாழை இலையின் மேல் எண்ணெயை தடவி, அதன் மேல் ஒரு அடை உருண்டையை வைத்து, விரல்களால் சம அளவுகளில் தட்டி இந்த அடையை எடுத்து தோசைக்கல்லில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பக்குவமாக சிவக்க வைத்து எடுக்க வேண்டும்.
உங்களுடைய வீட்டில் வாழை இலை இல்லை என்றால், பால் கவர் அல்லது வேறு ஏதாவது கொஞ்சம் திக்கான கவரின் மேல் எண்ணெயை தடவி இந்த அடையை விரல்களால் சம அளவில் தட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும். அடையை மொத்தமாக தட்டி விட்டால், தட்டிய அடை மேலே சிவக்கும். உள்ளே சீக்கிரத்தில் வேகாது. தோசைக்கல்லில் போட்டு அடையை மிதமான தீயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சிவக்க வைத்து எடுத்துக் கொண்டால் ரவை அடை தயாராகி இருக்கும். இந்த ரவை அடை சாப்பிடுவதற்கு மிக மிக சுவையாக இருக்கும்.
Tags:
ரவை அடைமேலும் செய்திகள்
வெள்ளைக் கறி
தோசைக்கான ஸ்பெஷல் சாம்பார்
மீல் மேக்கர் கோலா
முருங்கை மசாலா பொரியல்
சீரக துவையல்
ஸ்பெஷல் கத்தரிக்காய் சாதம்
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!