மீன் வடை
2022-11-28@ 18:02:22

தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் - 500 கிராம்
முட்டை - 1
உருளை கிழங்கு - 100 கிராம்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர் விட்டு வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் அதை எடுத்து முள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும். உருளை கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உதிர்த்த மீன், உருளை கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் கலவையில் சிறிது எடுத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும். ருசியான மீன் வடை தயார். இதை தோசைக் கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.
Tags:
மீன் வடைமேலும் செய்திகள்
கடம்பா கோல்டன் ஃப்ரை
ஹோட்டல் ஸ்டைல் மீன் சுக்கா
பழவேற்காடு மீன் மசாலா
மீன் கபாப்
கானங்கத்த மீன் புட்டு
கோல்டன் க்ரிஸ்பி இறால்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!