பட்டர் கேக்
2022-11-25@ 15:27:03

தேவையான பொருட்கள்
கோதுமை மா - 500g
சீனி - 500g
மாஜரின் - 500g
முட்டை -10
பேக்கிங் பவுடர் - 2 மே.க.
வனிலா - 2 மே.க.
பனானா எசன்ஸ் - 1 தே.க.
பிளம்ஸ் - 50g
முந்திரிப் பருப்பு - 50g
செய்முறை
கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடரை கலந்து மூன்று முறை அரிதட்டினால் அரித்து வைத்துக் கொள்க. மாஜரினை பெரிய ஒரு பாத்திரத்தில் போட்டு, சீனி, முட்டை மூன்றயும் சேர்த்து கலக்கி ஒரே பக்கமாக, சீனி கரையும்வரை நன்றாக அடித்துக் கொள்ளவும். பின்பு அடித்து வைத்துள்ள கலவையில் கோதுமை மாவை சிறிது, சிறிதாகத் சேர்த்தவாறே, ஒரே பக்கமாக அடித்துக் கொள்க. பின்னர், பனானா எசன்ஸ்,வனிலா, பிளம்ஸ், முந்திரி பருப்பு என்பனவற்றையும் சேர்த்துக் கலந்து கொள்க. கேக் தட்டை எடுத்து, ஒயில் பேப்பரை பரவி சிறிதளவு மாஜரினை பூசிக் கொண்ட பின்னர், கேக் கலவையை ஊற்றி அளுத்தமாகப் பரவிக் கொள்க.
180° C யில் 35 நிமிடம் பேக் செய்து கொள்க. கேக் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
Tags:
பட்டர் கேக்மேலும் செய்திகள்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!