SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

சப்பாத்தி லட்டு

2022-11-24@ 18:05:30

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 6
பொடித்த வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பாதாம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்


செய்முறை:

முதலில் சப்பாத்திகளை துண்டுகளாக்கிக் கொண்டு, மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அரைத்ததை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் நெய், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து கையால் பிசைந்து விட வேண்டும். பின்பு சிறிது கலவையை எடுத்து, அதை இறுக்கமாக உருட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்தையும் உருட்டினால், சப்பாத்தி லட்டு தயார். இந்த லட்டுகளை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால், 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த லட்டு செய்வதற்கு எஞ்சிய சப்பாத்திகளை பயன்படுத்தலாம் அல்லது புதிதாக சப்பாத்திகளை செய்தும் பயன்படுத்தலாம். இந்த சப்பாத்தி லட்டுக்களை 2 நாட்கள் வரை அறை வெப்பநிலையில் வைத்து சாப்பிடலாம். சப்பாத்தி லட்டுவிற்கு பாதாமை தவிர முந்திரி, பிஸ்தா என்று எந்த நட்ஸ்களையும் சேர்த்துக் கொள்ளலாம். வெல்லம் இல்லாதவர்கள், சர்க்கரையை கொண்டும் செய்யலாம். ஆனால் சர்க்கரையை பயன்படுத்துவதாக இருந்தால், 2 1/2 டேபிள் ஸ்பூன் பயன்படுத்துங்கள் போதும்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்