SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

செட்டிநாடு தக்காளி குழம்பு

2022-11-24@ 17:56:37

தேவையான பொருட்கள்:

தக்காளி - 3-4 (பெரியது மற்றும் நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

சின்ன வெங்காயம் - 1/2 கப்
தேங்காய் - 3/4 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2-3
எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை:

முதலில் ஒரு வாணலிடிய அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொட்டுக்கடலை, மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின்னர் அதில் தேங்காய் சேர்த்து கிளறி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தக்காளியை சேர்த்து, அதில் உப்பு தூவி, 10 நிமிடம் நன்கு வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்க வேண்டும். இறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி கிளறிவிட்டால், சுவையான செட்டிநாடு தக்காளி குழம்பு ரெடி.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்