SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

சாக்லேட் சாண்ட்விச்

2022-11-23@ 18:00:44

தேவையான பொருட்கள்:

பிரட் - 4 துண்டுகள்
டார்க் சாக்லேட் துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:

முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும். பின் பிரட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துண்டுகளை வைத்து, மற்றொரு பிரட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும். இதேப் போன்று மற்ற இரண்டு பிரட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெயை தடவி தயாரித்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, லேசாக அழுத்திவிட்டு, பிரட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.இதேப் போல் மற்றொரு சாண்ட்விச்சையும் டோஸ்ட் செய்து கொண்டால், சாக்லேட் சாண்ட்விச் தயார்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்