SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பேபி கார்ன்

2022-11-23@ 17:57:35

தேவையான பொருட்கள்:

மாவு தயாரிப்பதற்கு...

பேபி கார்ன் - 15
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

பிற பொருட்கள்...

ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1
ஸ்பிரிங் ஆனியன் வெள்ளைப் பகுதி - 1 டீஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் பச்சை பகுதி - 2 டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் - 1/4 கப்
பூண்டு - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப


செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி, பேபி கார்னை சேர்த்து 5 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பின் அதை எடுத்து சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் சோள மாவு, மைதா, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பேபி கார்ன் துண்டுகளை மைதா பேஸ்ட்டில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், பூண்டு, ஸ்பிரிங் ஆனியன் வெள்ளைப் பகுதி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அதன் பின் குடைமிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். அடுத்து, அதில் பொரித்த பேபி கார்னை சேர்த்து, அத்துடன் தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, அதன் பின் ஸ்பிரிங் ஆனியனின் பச்சை பகுதியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சில்லி பேபி கார்ன் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

  • china-spring-festival

    சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

  • pet-fesitival-mumbai

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

  • france-reform

    பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்