SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹோட்டல் ஸ்டைல் மீன் சுக்கா

2022-11-21@ 18:07:50

தேவை:
 

வஞ்சிர மீன் - அரை கிலோ (முள் எடுத்தது)
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 சிட்டிகை
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகுத்தூள்  1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 5
 ஏலக்காய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி -கைப்பிடி
எண்ணெய்- பொரித்தெடுக்க
உப்பு - தேவைக்கு.


செய்முறை:

ஒரு கிண்ணத்தில், அரிசி மாவு, கார்ஃபிளவர் மாவு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், உப்புடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். இதில், மீன் துண்டுகளை போட்டு கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும், மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி அதில் சேர்த்து, இரண்டு பக்கமும் வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். அதே வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ,சீரகம் சேர்த்து பொரிக்கவும். கூடவே, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

தக்காளி சேர்த்து வேகா வைத்ததும், மஞ்சள் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்புடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கவும். பின்னர், வறுத்துவைத்த மீன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி மிதமான சூட்டில் வேக வைக்கவும்.  தனியாக தோசைகல்லில் சுக்காவை குறைவான அனலில் சுண்ட வைத்தால் சுக்கா இன்னும் சுவையாக இருக்கும்.  இறுதியாக, கொத்தமல்லி தூவி இறக்கினால் மீன் சுக்கா ரெடி..!.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்