ரவா தோசை
2022-11-21@ 18:04:44

தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 300 கிராம்.
ரவை - 100 கிராம்.
சீரகம், பெருங்காயம் - சிறிதளவு.
மைதா மாவு - 2 சிட்டிகை.
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிதளவு.
பச்சைமிளகாய் - 1.
மிளகு - ஒரு சிட்டிகை.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - தேவையான அளவு.
பக்குவம்:
பச்சரிசி மாவு, ரவை மற்றும் மைதா மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். இந்த மாவுக் கலவையை பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், மிளகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இவை தயாரானவுடன் அடிகனமான தோசைக்கல்லை மிதமாக சூடு செய்யவும். பின்னர் சிறிதளவு எண்ணெய்யை தோசைக்கல்லில் தேய்த்து மாவை ஊற்றி, திருப்பிப் போட்டு பொன்னிறமாக எடுத்துப் பரிமாறவும். மைதா மாவை குறைவாக பெயரளவுக்குத்தான் சேர்க்க வேண்டும். அதிகமாகச் சேர்த்தால் தோசை கொழகொழவென்று ஆகிவிடும். சாப்பிட நன்றாக இருக்காது.
Tags:
ரவா தோசைமேலும் செய்திகள்
வெள்ளைக் கறி
தோசைக்கான ஸ்பெஷல் சாம்பார்
மீல் மேக்கர் கோலா
முருங்கை மசாலா பொரியல்
சீரக துவையல்
ஸ்பெஷல் கத்தரிக்காய் சாதம்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!