பாதாம் தேங்காய் பர்ஃபி
2022-11-14@ 18:01:33

தேவையானவை :
தேங்காய் துருவல் - 1 கப்,
தோல் நீக்கி பொடித்த பாதாம் - 1/2 கப்,
சர்க்கரை - 1 கப், நெய் - 1/3 கப்.
செய்முறை :
ஒரு கடாயில் நெய் சேர்த்து மிதமான தீயில் தேங்காய் துருவல் மற்றும் பாதாமினை சேர்த்து நன்கு வறுக்கவும். தேங்காயில் உள்ள எண்ணை மற்றும் பாதாம் எல்லாம் சேர்ந்து ஒன்றாக வரும் போது அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு வறுக்கவும். ஒரு தட்டில் நெய்யினை தடவி தனியே வைக்கவும். சர்க்கரை எல்லாம் கரைந்து தேங்காயுடன் ஒன்று சேர்ந்து நன்கு திரண்டு வரும். அந்த சமயத்தில் நெய் தடவிய தட்டில் கலவையை கொட்டி நன்கு பரப்பி விடவும். சூடு பாதியளவு குறைந்ததும், சின்ன சின்ன துண்டுகளாக வெட்டவும். நன்கு ஆறிய பிறகு துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும். இதனை காற்று புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் நன்றாக இருக்கும்.
Tags:
பாதாம் தேங்காய் பர்ஃபிமேலும் செய்திகள்
வரகு பாசிப்பருப்பு முறுக்கு
பொரி அல்வா
பொட்டுக்கடலை முறுக்கு
தேங்காய்ப்பால் முறுக்கு
சுகியம்
பூண்டு முறுக்கு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி