ஹார்ஸ் கிராம் ஃப்ரூட் சாலட்
2022-11-09@ 17:55:41

தேவையானவை:
கொள்ளு - 1 கப்,
தக்காளி -1/4 கப்,
கேரட் - 1/4 கப்,
வெள்ளரி - 1/4 கப்,
கேப்சிகம் - 1/4 கப்,
கொத்தமல்லி இலைகள் - 1/4 கப்,
ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு,
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்,
மிளகு தூள் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் கொள்ளுவைக் கழுவி ஊற வைக்கவும். அறை வெப்பநிலையில் தலைகீழாக ஒரு பாத்திரத்தால் மூடி 24 மணி நேரம் விடவும். அவ்வாறு செய்யும் போது கொள்ளு முளைவிட்டிருக்கும். மேலும் நீண்ட முளைகள் வேண்டும் என்றால், இன்னும் ஒரு நாள் துணியில் கட்டி வைக்கலாம். ஒரு சிறிய கிண்ணத்தில், தக்காளி, கேரட், வெள்ளரி, கேப்சிகம், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை கலக்கவும். அதனுடன் கொள்ளு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். ஆலிவ் ஆயில், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
மேலும் செய்திகள்
வெள்ளைக் கறி
தோசைக்கான ஸ்பெஷல் சாம்பார்
மீல் மேக்கர் கோலா
முருங்கை மசாலா பொரியல்
சீரக துவையல்
ஸ்பெஷல் கத்தரிக்காய் சாதம்
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி