SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாம்பே காஜா

2022-11-07@ 17:58:19

தேவை:


மைதா மாவு - 300 கிராம்
சர்க்கரை - 750 கிராம்
கார்ன் மாவு (சோள மாவு) - 3 மேசைக்கரண்டி
ஆரஞ்சு கலர் -  கால் தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் -  அரை லிட்டர்  
உப்பு - ஒரு சிட்டிகை.


செய்முறை :

ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கார்ன் மாவு, நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு பிசைந்து வைத்த மைதா மாவை இரண்டு அல்லது மூன்று அப்பளமாக மெல்லியதாக இட்டு கொள்ள வேண்டும். கார்ன் மாவு நெய் கலவையை அப்பளங்களின் ஒரு புறம் முழுமையாக தடவிக் கொள்ளவும். பின் அப்பளங்களை மெல்லியதாக சுருட்டிக் கொள்ளவும் (ரோல்). ரோல் செய்த அப்பளங்களை வேண்டிய அளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் (பாம்பே காஜாவின் அளவு துண்டுகளின் அளவை பொருத்தது). வெட்டிய துண்டுகளை மீண்டும் மெல்லிய அப்பளங்களாக இட்டுக் கொள்ளவும். அப்பளத்தை பாதியாக வெட்டி ஒவ்வொரு பாதியையும் இரண்டாக மடித்துக் கொள்ளவும் (முக்கோணமாக). அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கோணங்களை எண்ணெயில் (அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும்) போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்த பாம்பே காஜாக்களை தயாராக வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு ஒரு நிமிடம் வைத்திருந்து எடுத்து தனியாக வைக்கவும்.

சர்க்கரை பாகு வைக்க:

 பாம்பே காஜாவிற்கு இரண்டு கம்பி பதம் பாகு நீர்க்க இருக்க வேண்டும். சர்க்கரை முழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, ஆரஞ்சு கலர் சேர்த்து மிதமான சூட்டில் கனமான பெரிய பாத்திரத்தில் கொதிக்க விடவும். பாகை விரலில் தொட்டுப் பார்க்கும் போது இரண்டு நூலாக வரும் போது அடுப்பை அணைக்கவும்.  பாம்பே காஜா போட்டு எடுக்கும் போது சர்க்கரை பாகு இறுக இறுக சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்