மஸ்ரூம் பாப்பர்ஸ்
2022-11-04@ 18:04:10

தேவையான பொருட்கள்:
காளான் - 20
க்ரீம் சீஸ் - 1/4 கப்
மொசரெல்லா சீஸ் - 1/2 கப்
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கோட்டிங்கிற்கு...
மைதா - 1 கப்
சோள மாவு - 1/4 கப்
மைதா - 1/4 கப்
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
பிரட் தூள் - 2 கப்
செய்முறை:
முதலில் முழு காளானை எடுத்து, அதன் தண்டு பகுதியை மட்டும் நீக்கிவிட வேண்டும். அந்த தண்டு பகுதியை தூக்கிப் போடாமல், அதை பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் க்ரீம் சீஸ், மொசரெல்லா சீஸ், உப்பு, மிளகுத் தூள், பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கிய காளான் தண்டுகளை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு காளானை எடுத்து, அதனுள் சீஸ் கலவையை வைத்து நிரப்ப வேண்டும். பிறகு ஒரு பௌலில் 1 கப் மைதா, 1/4 கப் சோள மாவு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலந்து, நீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு சீஸ் நிரப்பிய காளான் ஒன்றை எடுத்து, அதை மைதா மாவில் பிரட்டி, பின் நீர் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவில் பிரட்ட வேண்டும். அதன் பின் பிரட் தூளில் பிரட்ட வேண்டும்.பின்னர் மீண்டும் நீர் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, மீண்டும் பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து காளானையும் செய்து, ஃப்ரிட்ஜில் சில நிமிடங்கள் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தயாரித்து வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மஸ்ரூம் பாப்பர்ஸ் தயார்.
Tags:
மஸ்ரூம் பாப்பர்ஸ்மேலும் செய்திகள்
கோங்குரா ஊறுகாய்
மொச்சை கொட்டை மசாலா
ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்
மரவள்ளிக் கிழங்கு பக்கோடா
பனங்கிழங்கு வாழைப்பூ வடை
ரெட் சாஸ் பாஸ்தா
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!