SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரட் பாஸந்தி

2022-11-04@ 17:35:10

தேவையானவை:

பால் - 1½ லிட்டர்,
பிரெட் - 5 துண்டுகள் (ஓரம் நீக்கியது),
சர்க்கரை பொடித்தது - 1 கப்,
டூட்டி ஃப்ரூட்டி - அலங்கரிக்க.


செய்முறை:

அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும். அவ்வாறு கொதிக்கும் போது அதன் மேலே ஆடை படியும். அதை எடுத்து தனியே வைக்கவும். பிரட்டை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பால் பாதியளவு சுண்டிய பிறகு அதில் பொடித்த பிரட் துகல்கள் மற்றும் சர்க்கரையை சேர்த்து கிளறவும். கெட்டிப்பதம் வந்தவுடன் எடுத்து வைத்த பால் ஏடுகளை சேர்த்து கிளறி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும். தேவைப்பட்டால் டூட்டி ஃப்ரூட்டி அல்லது பாதாமை சீவி சேர்க்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்