கேரட் லட்டு
2022-10-26@ 18:03:13

தேவையான பொருட்கள்:
கேரட் - 1 கப் (துருவியது)
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்டு மில்க் - 1/3 கப்
பிஸ்தா - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், துருவிய கேரட்டை சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும். கேரட் சுருங்கி, அதில் இருந்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும். பின் அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து ஒட்டும் பதத்தில் வரும் வரை நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். பின்பு அதில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, கெட்டியாகும் வரை கிளறி விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும். கலவையானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போதே அதை சிறு சிறு லட்டுகளாக உருட்டி, அதன் மேல் நறுக்கிய பிஸ்தாவை வைக்க வேண்டும். இப்போது சுவையான கேரட் லட்டு தயார்.
குறிப்பு: கேரட்டில் இருந்து பச்சை வாசனை போன பின்னரே கண்டென்ஸ்டு மில்க்கை சேர்க்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளலாம். இந்த கேரட் லட்டு அறை வெப்பநிலையில் ஒரு நாள் வரை நன்றாக இருக்கும். அதுவே ஃப்ரிட்ஜில் வைத்தால், 3 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
Tags:
கேரட் லட்டுமேலும் செய்திகள்
வரகு பாசிப்பருப்பு முறுக்கு
பொரி அல்வா
பொட்டுக்கடலை முறுக்கு
தேங்காய்ப்பால் முறுக்கு
சுகியம்
பூண்டு முறுக்கு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!