பார்லி வேர்க்கடலை சுண்டல்
2022-10-10@ 18:04:42

தேவையானவை:
ஊறவைத்த பார்லி - 1 கப்,
வறுத்த வேர்க்கடலை - ½ கப்,
சீரகம்,
சோம்பு தலா - ¼ டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது),
கொத்தமல்லி - சிறிதளவு,
இஞ்சி துருவல் - ½ டீஸ்பூன்,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
தேங்காய் துருவல் - ½ கப்.
செய்முறை:
ஊறவைத்த பார்லி, வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பச்சைமிளகாய், சோம்பு, இஞ்சித் துருவல் போட்டு தாளித்து பின் வெந்த பார்லி, வேர்க்கடலை போட்டு உப்புச் சேர்த்துக் கிளறவும். பின் நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவலைச் சேர்த்து ஒன்றாக கலக்கி இறக்கவும். பார்லி வேர்க்கடலைச் சுண்டல் ரெடி.
குறிப்பு: கர்ப்பிணிப் பெண்களுக்கும் நீர் பிரியாமல் சிரமப்படுபவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது.
மேலும் செய்திகள்
மல்டி மில்லட் தோசை
முடக்கத்தான் தோசை
பாசிப்பருப்பு சூப்
தினை பனீர் கட்லெட்
சாமைமாம்பழக் கேசரி
முள்ளங்கி சோள சப்பாத்தி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!