எள் ரசம்
2022-10-06@ 16:45:48

தேவையானவை:
துவரம்பருப்பு ஒரு கப்
தக்காளி - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2
எள், தேங்காய்துருவல், மிளகு, சீரகம், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
நெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
எள்ளை வெறும் வாணலியில் வறுத்து, தேங்காய் துருவல், மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து எடுக்கவும். துவரம்பருப்பை வேகவிடவும். ஒரு பாத்திரத்தில் புளி கரைசல், நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் அரைத்து வைத்த விழுது, வெந்த பருப்பு சேர்த்து, நுரைத்து வரும்போது இறக்கவும். நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். ‘கமகம’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார். எள் சனி பகவானுக்கு உகந்த தானியம். அன்று எள் விளக்கு ஏற்றி தரிசிக்க சங்கடங்களை நீக்கி அருள் புரிவார்.
Tags:
எள் ரசம்மேலும் செய்திகள்
நாட்டுக்கோழி வறுவல்
மட்டன் எலும்பு குழம்பு
தேங்காய் மட்டன் குழம்பு
தேங்காய் மட்டன் குழம்பு
மொச்சைப்பயிறு கருவாட்டுக் குழம்பு
கிடாக்கறி கிராமத்து வறுவல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!