SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசலைக் கீரை கூட்டு

2022-09-29@ 16:15:00

தேவையானவை:

பசலைக் கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - 200 கிராம்
சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு பல் - 3
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:  

குக்கரில் துவரம்பருப்பை இட்டு, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின்னர்,  வாணலியில்  எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம் நறுக்கி போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர், தக்காளி சேர்த்து வதங்கியதும், பசலைக்கீரை சேர்த்து வதக்கவும். கீரை பாதி வெந்து சுருங்கியதும், சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். பச்சை வாசனை போனதும் வேகவைத்த கீரை, உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொதிக்கவிடவும். இறுதியாக. மற்றொரு வாணலியில்  எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து பொரித்து கீரையில் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான பசலைக்கீரை கூட்டு தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்