SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோல்டன் க்ரிஸ்பி இறால்

2022-09-29@ 16:10:22

தேவையானவை

இறால்  - 300 கிராம்
முட்டை - 1
இஞ்சி பூண்டு விழுது  - 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
 சில்லி  ப்ளேக்ஸ்  - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கார்ன் ஃபளவர் மாவு - 2 தேக்கரண்டி
 
கோட்டிங்கிற்கு

பிரெட்  க்ரம்ஸ் -  3 தேக்கரண்டி
மைதா - 1 தேக்கரண்டி
மிளகுத் தூள்  - கால் தேக்கரண்டி
உப்பு  - சிறிதளவு
எண்ணெய்  - தேவைக்கேற்ப


செய்முறை:

இறாலை  சுத்தம்  செய்து, பின்னர் இறால்  முழுவதும்  டூத் பிக் குச்சியால்  குத்தி  எடுத்துக்கொள்ளவும்.  பின்னர், ஒரு கிண்ணத்தில், முட்டையை உடைத்து ஊற்றி  நன்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன்  இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், சில்லிப்ளேக்ஸ், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.  பின்னர்,  அதில் இறால்களை  எடுத்து அதில்  சேர்த்து கிளறவும். அதனுடன் கார்ன் ஃப்ளவர் மாவை சேர்த்து கலந்து பிறகு அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.  பின்னர், ஒரு  கிண்ணத்தில் பிரெட்க்ரம்ஸ், மைதா, மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதில்  இறாலை  புரட்டி  எடுத்துக் கொள்ளவும். பின்னர், எண்ணெய்யில் பொரித்து  எடுக்க வேண்டும். சுவையான கோல்டன் க்ரிஸ்பி இறால்  தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்