வெள்ளை பூசணி பொரியல்
2022-09-28@ 16:46:15

தேவையானவை:
வெள்ளைப் பூசணிக்காய் துண்டுகள் -2 கப்
வேர்க்கடலை - கால் கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் ஒவ்வொன்றாகப் போட்டு தாளித்து பூசணித்துண்டுகள் மற்றும் உப்பு சேர்க்கவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம், மூடி போட்டு வேகவிடவும். 10 - 15 நிமிடங்களில் வெந்துவிடும். இடையிடையே கிளறிவிடவும். வெந்ததும் கரகரப்பாக பொடித்த வேர்க்கடலையை தூவி இறக்கவும். வேர்க்கடலைக்கு பதில் தேங்காய்த்துருவலும் சேர்க்கலாம். சத்தான வெள்ளைப் பூசணி பொரியல் தயார்.
Tags:
வெள்ளை பூசணி பொரியல்மேலும் செய்திகள்
முடக்கத்தான் தோசை
பாசிப்பருப்பு சூப்
தினை பனீர் கட்லெட்
சாமைமாம்பழக் கேசரி
முள்ளங்கி சோள சப்பாத்தி
கேப்பை கஞ்சி
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!