SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்

2022-09-22@ 17:46:29

தேவை:

வடித்த சாதம்  ஒரு கப்
பால் அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது)
தயிர் 2 டீஸ்பூன்
திராட்சை (பச்சை, கறுப்பு) தலா 10
மாதுளை முத்துகள் 2 டீஸ்பூன்
கடுகு, கடலைப்பருப்பு  தலா அரை டீஸ்பூன்
இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய்  ஒரு டீஸ்பூன்
உப்பு  தேவையான அளவு 


செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப் பருப்பு, இஞ்சி தாளிக்கவும். அகலமான பாத்திரத்தில் சாதத்துடன் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். இதனுடன் பால், தயிர், தாளித்த கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, மாதுளை முத்துகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும். இப்படி செய்து லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பினால், மதியம் சாப்பிடும்போது கொஞ்சம்கூட புளிக்காது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்