SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குனாஃபா

2022-09-22@ 17:45:21

தேவையான பொருட்கள் :

250 கிராம் வெர்மிசெல்லி உடைந்த
வெண்ணெய் உருகியது - 200 கிராம்
பிஸ்தா நறுக்கியது - 1/4 கப்

குனாஃபா நிரப்ப :

பால் - 1 கப்
கிரீம் - 1 கப்
சோள மாவு - 1/4 கிலோ
ரோஸ் நீர் - 1 டீஸ்பூன்
சீஸ் அரைத்தது - 1/2 கப்
மொஸெரெல்லா சீஸ் அரைத்தது -1/2 கப்
சர்க்கரை - 2 தேக்கரண்டி

சர்க்கரை சிரப்பிற்கு:

தண்ணீர் - 1 கப்
வெள்ளை சர்க்கரை - 1½ கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
ரோஸ் நீர் - 1 டீஸ்பூன்


செய்முறை:

ஒரு கிண்ணத்தில் வெர்மிசெல்லியை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை சிறு துண்டுகளாக உடைத்து உருகிய வெண்ணெய் ஊற்றி கைகளால் நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு தனி கிண்ணத்தை எடுத்து பால் கிரீம் சர்க்கரை மற்றும் சோள மாவு சேர்க்கவும். அவற்றை நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். இப்போது தடிமனான பேனை அடுப்பில் வைத்து நாம் கலந்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி மெதுவாக சூடாக்கவும். அது சிறிது கெட்டியாகும் வரை ஒட்டிக் கொள்ளாமல் கலவையை கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்து விடவும். இப்போது இந்த கலவையில் சீஸ் மட்டும் மொஸெரெல்லா சீஸ் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

சர்க்கரை சிரப் செய்முறை

மற்றொரு பேனை எடுத்து தண்ணீர் சர்க்கரை சேர்த்து சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை கலக்க வேண்டும். இந்தப் பாகு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருந்து பின்னர் அவற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

குனாஃபா செய்முறை

ஒரு பேக்கிங் பேனை எடுத்து அதில் மேலே சொன்ன வெர்மிசெல்லி கலவையை தேவையான அளவு ஊற்றி மட்டமாக வைத்துக் கொள்ளவும். இப்போது அந்த வெர்மிசெல்லி கலவையின் மேலே சீஸ் கலவையை ஊற்றி கரண்டியால் சமமாக அனைத்து இடத்திலும் பரப்பவும். பின்னர் மீதமுள்ள வெர்மிசெல்லி கலவையை எடுத்து சீஸ் அடுக்கு மேலே மற்றொரு அடுக்கை உருவாக்கவும். பின்னர் மீண்டும் உருகிய வெண்ணெய் கலவையைக் கொண்டு மேல் அடுக்கை உருவாக்கவும். அடுப்பை ஏற்றி அடுப்பில் 200 டிகிரி வரும் வரை அரை மணி நேரம் வைக்கவும். இந்த குணா அப்பா மேற்பரப்பில் உன்னிடம் ஆகவும் நொறுங்கியதாகவும் மாறும் போது தயாராகி விட்டது என்று அர்த்தம். பின்னர் இந்த குனாபாவை அடுப்பிலிருந்து வெளியே எடுத்து அதன் மீது சர்க்கரை சிறப்பை ஊற்ற வேண்டும். பின்னர் பரிமாறுவதற்கு முன்பு பிஸ்தாவை கொண்டு அலங்கரித்து கடைசியாக பீசா அல்லது கேக் போல வெட்டி பரிமாறலாம்.

குறிப்பு:

குனாஃபா செய்து முடித்தவுடன் அதனுடைய சூடு குறையத் தொடங்கும் அந்த சமயத்தில் அது அழுத்தமாக மாறி விடும். அதனை தடுக்க ரிக்கோட்டா அல்லது பன்னீர் போன்றவற்றை அதனுடன் சிறிது கலக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்