SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சார்மினார் பிரியாணி

2022-09-22@ 17:39:58

தேவையான பொருட்கள்

அரிசிக்காக:

2 கப் நீளமான அரிசி
2-3 பிரிஞ்சி இலை
2-3 ஏலக்காய்
2-3 கிராம்பு
1 தேக்கரண்டி நெய்
1/2 கப் புதினா
1 அன்னாட்சி பூ
1-2 pcs பட்டை
சிறிய துண்டுகள் தண்ணீருக்கு தேவையானது
உப்பு
600 gms மட்டன்
2 வெங்காயம்
2 தக்காளி
250 gms நெய்
2 கிராம்பு
2 ஏலக்காய்
2 பட்டை
தேவையான உப்பு
4-5 கிராம்பு
1-2 pcs பட்டை, சிறிய
3-4 ஏலக்காய்
1 தேக்கரண்டி சீரகம்
12-14 மிளகு

ஊற வைக்க

தேவையான அளவு உப்பு
2 மேஜைக் கரண்டி மிளகாய்த் தூள்
2 மேஜைக் கரண்டி கொத்த மல்லித் தூள்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1/2 தேக்கரண்டி கரம் மசாலா
1 கப் தயிர்
1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்
1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்
2 பச்சை மிளகாய் (கீறியது)
1/4 கப் பால்
5-6 குங்குமப்பூ
1/2 கப் புதினா
2 மேஜைக் கரண்டி லெமன் ஜுஸ்
உப்பு

லேயரிங்

வறுத்த வெங்காயம்
வறுத்த பூண்டு
1 கப் குங்குமப் பூ ஊற வைத்த பால்
கொத்தமல்லி (நறுக்கியது)
1/2 கப் நெய்
for garnishing தக்காளி, நறுக்கப்பட்ட
for garnishing வெங்காயம் மற்றும் பூண்டு


எப்படி செய்வது

ஒரு கிண்ணத்தில் மட்டனை ஊற வைக்கத் தேவையான மசாலா பொருட்களை ஒன்றாக கலந்து வைக்கவும்.அதில் மட்டன் துண்டு களைப் போட்டு நன்றாக கிளறி 3-4 மணி நேரம் ஊறுவதற்கு ப்ரிஜ்ஜில் எடுத்து வைக்கவும். மட்டன் ஊறும் நேரத்தில் நீளமான அரிசியை தயார் செய்யவும். பாசுமதி அரிசியை 10-15 நிமிடம் ஊற வைக்கவும். குங்குமப் பூ ஊற வைத்த தண்ணீரில் அரிசியை வேக வைக்கவும். பாதி வெந்ததும் அரிசியை வடித்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடு பண்ணவும். வெங்காயத்தை எண்ணெய்யில் வறுத்து சேர்க்கவும் அதனுடன் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்க்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும். சூட்டை குறைத்து பாலை சேர்க்கவும். மசாலா பொடி சேர்த்து கலக்கவும் பால் திரியாமல் பார்த்துக் கொள்ளவும். இதனுடன் ஊற வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது பிரியாணி மசாலாவை சேர்த்து தீயைக் குறைத்து வைத்து வேக வைக்கவும்.மட்டன் முழுவதுமாக வெந்ததும் அடுப்பி லிருந்து இறக்கவும். பிரியாணியை தயார் செய்ய, பெரிய அகலமான பாத்திரத்தை எடுக்கவும். நெய் சாதத்தை ஒரு லேயராக வைத்து, அதனுடன் வெங்காயம், கொத்த மல்லி, நெய், மற்றும் குங்குமப் பூ பால் ஊற்றி, அதன் மேல் வேக வைத்த கறியை வைக்கவும். இதே போல் லேயரை சாதம் மற்றும் கறி தீரும் வரை வைக்கவும். பின் பாத்திரத்தை மூடி அதன் மேல் கனமான பாத்திரத்தை வைக்கவும். மீடியம் ஹீட்டில் 20-25 நிமிடம் வேக வைக்கவும். பின் அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடங்களுக்கு மூடியை திறக்கவும். 10 நிமிடங்களு க்குப் பின் அரிசி உடையாமல் கிளறி விடவும். ரைத்தாவுடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்