SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

கிராமத்து ஸ்டைல் கிடா குழம்பு

2022-09-13@ 16:51:17

தேவை:

ஆட்டுக்கறி    அரை கிலோ
சின்ன வெங்காயம்     10
தக்காளி    2
காய்ந்த மிளகாய்    10
தனியா    1 ஸ்பூன்
மிளகு    2 ஸ்பூன்
எண்ணெய்    தேவையான அளவு
சோம்பு    ½ ஸ்பூன்
உப்பு    தேவையான அளவு
பூண்டு    5 பல்
ஏலக்காய்    2
துருவிய தேங்காய்    1/4 கப்
மஞ்சள் தூள்    ½ ஸ்பூன்
கறிவேப்பிலை    சிறிதளவு
கொத்தமல்லி    சிறிதளவு
கடுகு உளுந்து    1 ஸ்பூன்
சீரகம்    1 ஸ்பூன்
பட்டை    1 துண்டு
லவங்கம்    2
கசகசா    1 ஸ்பூன்


பக்குவம்:

முதலில் நன்றாக கறியை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கறியில் தேவையான அளவு தண்ணீர் சிறிது சீரகம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு என அனைத்தையும் தனித்தனியே போட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வறுத்த பொருட்களுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக  அரைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி, என அனைத்தையும் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். அத்துடன் வேகவைத்த ஆட்டுக் கறியை சேர்த்து வதக்கவேண்டும்.
இப்போது அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து எண்ணெய் நன்கு திரண்டுவரும் வரையில் கொதிக்கவைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லியை தாளித்துவிட்டு இறக்கினால் சுவையான கிராமத்துக் கறிக்குழம்பு ரெடி.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்