SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செட்டிநாடு வாழைக்காய் கோலா உருண்டை

2022-09-05@ 14:58:53

தேவையானவை:

மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு -1/4 கப்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -பொரிக்க‌

எண்ணெயில் வதக்கி அரைக்க‌

எண்ணெய் -1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -10
பச்சை மிளகாய்- 2
காய்ந்த மிளகாய்- 2
சோம்பு- 1 டீஸ்பூன்
கசகசா -1 டீஸ்பூன்
தேங்காய்த் துறுவல் -2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி -1 சிறுதுண்டு
பூண்டுப்பல்- 4
கறிவேப்பிலை -1 கொத்து
பட்டை -சிறுதுண்டு
கிராம்பு -2


செய்முறை

1 வாழைக்காயை 4 ஆக நறுக்கி மஞ்சள்தூள் + முழ்குமளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். கத்தியில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறியதும் தோலுரித்து மசித்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி ஆறியதும் நைசாக அரைக்கவும். இதனை மசித்த வாழைக்காயுடன் சேர்த்து உப்பு + பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசையவும். மாவு தளர்த்தியாக இருந்தால் மேலும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசையவும். உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

குறிப்பு :

பொட்டுக்கடலை மாவுக்கு பதில் கடலை மாவினை வறுத்து சேர்க்கலாம். பட்டை கிராம்பு சேர்ப்பது வாசனையாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்