SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல்

2022-09-02@ 17:24:12

தேவையான பொருட்கள்: 

முட்டை - 6
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரக விதைகள் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப


செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.பின்பு அதில் பீன்ஸ் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு தூவி நன்கு வேகும் வரை வதக்கவும். அதற்குள் மிளு மற்றும் சீரகத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு அரைத்த பொடியை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்து, அதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விடவும். முட்டை நன்கு வெந்ததும், அதன் மேல் கொத்த மல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்