SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறால் வடை

2022-09-01@ 16:41:22

தேவையான பொருள்கள் :

இறால் – 100 கிராம்
உடைத்த கடலை – ஓரு கப்
கடலை மாவு – அரை கப்
வெங்காயம் – பெரியது 1
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 6 பல்
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
சோம்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு


செய்முறை :

இறாலை உரித்துக் சுத்தம் செய்து உப்பையும், மஞ்சள் பொடியையும் கலந்து தண்ணீரில் வேக வைத்து ஆறியதும் அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். உடைத்த கடலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை அம்மியில் நசுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்து அரைத்த இறால், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கி வைத்துள்ள மசாலா, அரைத்த உடைத்த கடலை, கடலை மாவு, உப்பு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாகப் பிசையவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, எண்ணெய் விட்டுக் கொதித்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். சுவையான இறால் வடை தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்