SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

மீல் மேக்கர் குழம்பு

2022-09-01@ 16:39:46

தேவையானவை:  

சோயா உருண்டை அல்லது மீல்மேக்கர் - 15
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
தக்காளி - 1
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
புளி - 1 எலுமிச்சை அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் -2 டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 4
சோம்பு - கால் டீஸ்பூன்

தாளிக்க:  

கடுகு அரை - டீஸ்பூன்
சோம்பு கால் - டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் -1 சிட்டிகை
எண்ணெய் -6 டேபிள் ஸ்பூன்


செய்முறை:  

வெங்காயத்தையும் பூண்டையும் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். சோயா உருண்டைகளை, கொதிக்கும் நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, பிறகு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக வைக்கவும். நீரை வடித்து விடவும். வாணலியில் சிறிது எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்து, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் தக்காளியையும் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு உப்பு, புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி சேர்க்கவும். நன்கு கொதித்ததும், சோயா உருண்டைகளை குழம்பில் போட்டு, சோயா உருண்டைகளில் குழம்பு சாரும் வரை கொதிக்க விடவும். குழம்பு சிறிது கெட்டியானதும் அரைத்ததைக் கரைத்து ஊற்றி, கொதித்ததும் இறக்கி விடவும்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்