SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுண்டைக்காய் பொரியல்

2022-08-30@ 17:32:15

தேவையானவை:

சுண்டைக்காய் - 200 கிராம்
வெங்காயம், தக்காளி - 1
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 4 பத்தை
கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை:

முதலில் சுண்டைக்காய்களை அலசிய பின் அவற்றை மத்து அல்லது உரலில் இரண்டாக பிரியாதவாறு இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி இந்த சுண்டக்காய்களை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்ததும் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டும். பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்க வேண்டும். தாளித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். சிவந்ததும் தக்காளி சேர்க்க வேண்டும். இரண்டும் ஒன்று சேர வெந்ததும் வேக வைத்த சுண்டைக்காயை சேர்த்து பிரட்ட வேண்டும். பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து பிரட்டிக் கொள்ளுங்கள்.இதற்கு தண்ணீர் ஊற்றக்கூடாது எண்ணெயிலேயே பிரட்ட வேண்டும். எனவே சிறு தீயில் வைத்து பொடி வாசனை போனதும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது ருசியான சுண்டைக்காய் பொரியல் ரெடி!!! இதை சப்பாத்திக்குக் கூட தொட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு: வீட்டுக்கு ஒரு சுண்டைச் செடி இருந்தால் போதும்… வற்றல் தயாரித்து வைக்கலாம். பொரியல், கூட்டு, சாம்பார் என்று பல விதமாக தயாரிக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்