மூக்கிரட்டைக் கீரை சூப்
2022-08-30@ 17:26:16

தேவை:
மூக்கிரட்டைக் கீரை - 2 கையளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 2 பல்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, வெங்காயம், தக்காளி, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். நன்றாகக் கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும். சூப்பரான மூக்கிரட்டைக் கீரை சூப் ரெடி. மூக்கிரட்டை கீரை கிடைக்காதவர்கள் மூக்கிரட்டைக் கீரைப் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.
Tags:
மூக்கிரட்டைக் கீரை சூப்மேலும் செய்திகள்
கோதுமை ஃபலூடா
ஈரல் மாங்காய் சூப்
ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி
காளான் தேங்காய் பால் சூப்
தக்காளி தேங்காய்ப்பால் சூப்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி