வாழைத்தண்டு சூப்
2022-08-18@ 16:42:56

பச்சை மிளகாய் - 5
காய்ந்த மிளகாய் - 2
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி - பெரிய துண்டு
பூண்டு - 5 பல்
சீரகம் - 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1/4 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
கடுகு - சிறிது
உளுந்தம்பருப்பு - சிறிது
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடியில் பாதி துருவியது
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
பர்மா பக்குவம்:
வாழைத்தண்டை நார் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். சமைக்கும்வரை மோர் கலந்த நீரில் போட்டால் கறுத்துப் போகாமல் இருக்கும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்புடன், மஞ்சள் தூள், சீரகம், எண்ணெய் சேர்த்து வேகவிடவும். பருப்பு சிறிது வெந்ததும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நறுக்கிய வாழைத்தண்டை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வாழைத்தண்டு நன்கு வெந்ததும் அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். தனியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து தாளித்து வாழைத்தண்டு கலவையில் ஊற்றவும். ஒருசேர கொதிக்கும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும். இஞ்சி பூண்டுதான் இதன் சிறப்பே. எனவே சற்று அதிகமாகவே சேர்த்துக்கொள்ளலாம்.
Tags:
வாழைத்தண்டு சூப்மேலும் செய்திகள்
கேரட், வெள்ளரிக்காய், ஆரஞ்சு ஜூஸ்
கோதுமை ஃபலூடா
ஈரல் மாங்காய் சூப்
ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி
காளான் தேங்காய் பால் சூப்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!