SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கம்பு ரொட்டி

2022-08-16@ 17:21:39

தேவை:

கம்பு மாவு  ஒரு கப்
வெங்காயம்  1
தக்காளி  100 கிராம்
பச்சை மிளகாய்  4
கொத்தமல்லி  சிறிதளவு
மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு  தேவையான அளவு


செய்முறை:

கம்பு மாவில் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை வார்த்து, கனமான ரொட்டிகளாக சுட்டெடுக்கவும். சுட்ட ரொட்டிகளை சிறு சிறு துண்டு களாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி, கம்பு ரொட்டித் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.


குறிப்பு: காலை நேர டிபனுக்கு உகந்தது. அதிக நேரம் பசி தாங்கும் என்பதால் நொறுக்ஸ் சாப்பிடும் எண்ணம் தோன்றாது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்