படோலி
2022-08-15@ 16:03:49

தேவை:
அவரைக்காய் - 100 கிராம்
கடலைப்பருப்பு அல்லது பயத்தம்பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று (துருவிக் கொள்ளவும்)
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
எண்ணெய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
பக்குவம்:
பருப்பை சுத்தம் செய்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீர் வடித்து, உப்பு, பச்சை மிளகாய், பூண்டு, தோல் சீவிய இஞ்சி, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, துருவிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதில் அரைத்த விழுதை கொட்டிக் கிளறவும். அடுப்பை குறைவான தீயில் வைத்து கடாயை மூடி வைக்கவும். 3நிமிடத்துக்கு ஒரு முறை மூடியைத் திறந்து, கிளறிக் கொள்ளவும். நன்கு வெந்து வந்ததும் (கையில் ஒட்டாத பதம்)... நறுக்கி, வேக வைத்து, வதக்கிய அவரையை சேர்த்துக் கலக்கவும். ஒன்றாக சூடுபட வதங்கியதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி கலந்தால்... படோலி ரெடி.
Tags:
படோலிமேலும் செய்திகள்
மல்டி மில்லட் தோசை
முடக்கத்தான் தோசை
பாசிப்பருப்பு சூப்
தினை பனீர் கட்லெட்
சாமைமாம்பழக் கேசரி
முள்ளங்கி சோள சப்பாத்தி
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி