SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்தரிக்காய் ஊறுகாய்

2022-08-11@ 11:54:55

தேவை:

கத்தரிக்காய் - 500 கிராம்  
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
புளி - எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்தூள் - 50 கிராம்
வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

வெந்தயம் - அரை டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்


பக்குவம்:

கத்தரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, ‘கட்’ செய்யவும்.  புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்து, கத்தரிக்காயுடன் கலக்கவும். அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்தரிக்காயை எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றிக் கலக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்தரிக்காயில் போட்டுக் கலந்தால்... கத்தரிக்காய் ஊறுகாய் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்