SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளை அப்பம்

2022-08-06@ 17:28:44

தேவையானவை:


பச்சரிசி - 2 கப்
முழு வெள்ளை உளுந்து - ¼ கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
பச்சைமிளகாய் - 2
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 8 இதழ்கள்
எண்ணெய் - பொரிப்பதற்கு


செய்முறை:

அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக நீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அரைத்த மாவில் உப்பு, இஞ்சித்துருவல், பச்சைமிளகாய் அரிந்து போட்டு, கறிவேப்பிலையை பொடியாக அரிந்து போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். கலந்த மாவு இட்லிமாவு பதம் இருக்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும். காய்ந்ததும் கலந்தமாவினை ஒரு கரண்டியால் எடுத்து ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவினையும் இதுபோல் அப்பங்களாகச் செய்து எடுக்கவும். ஆவணி அவிட்டம் அன்று செய்து படைக்கவும். ஆடி மாதம் ஒரு சிலருக்கும் ஆவணி மாதம் ஒரு சிலருக்கும் இந்த ஆவணி அவிட்டம் வரும்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்