முப்பருப்பு வடை
2022-08-05@ 17:49:36

தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம் பருப்பு - தலா ½ கப்
உளுத்தம் பருப்பு - ¼ கப்
வரமிளகாய் - 2
கொர கொரப்பாகப் பொடித்த மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
உடைத்த முந்திரித் துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - ½ டீஸ்பூன்
பொடியாக அரிந்த மல்லி, கறிவேப்பிலை இதழ்கள் - தலா 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
3 பருப்புகளையும் வரமிளகாயுடன் சேர்த்து நீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் நீரினை வடிகட்டி உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு உடைத்த முந்திரித் துண்டுகள், பெருங்காயம், தேங்காய்த் துருவல், மிளகுத் தூள், மல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் பிசைந்த மாவினை வடைகளாகத் தட்டி பொரித்து எடுக்கவும். முப்பருப்பு வடை தயார். வரலட்சுமி விரதத்தன்று (வெங்காயம் சேர்க்காமல்) இந்த முப்பருப்பு வடையினைச் செய்து அம்மனுக்கு படைக்கலாம்.
Tags:
முப்பருப்பு வடைமேலும் செய்திகள்
வெள்ளை அப்பம்
புரோட்டின் மிக்சர்
சில்லி பாப்பர்ஸ்
இஞ்சி சட்னி
முட்டைக்கோஸ் வடை
பொடி மாங்காய் ஊறுகாய்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!