SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடமிளகாய் நண்டுக்கறி பொரியல்

2022-08-02@ 16:09:32

தேவையானவை:

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
குட மிளகாய் - கால் கிலோ
பொட்டுக்கடலை - கால் கப்
நறுக்கிய கொத்த மல்லித் தழை - 2 தேக்கரண்டி
வேர்க்கடலை - கால் கப்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 6
கசகசா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 6
தேங்காய் - ஒரு மூடி
பெரிய நண்டு - அரை கிலோ


செய்முறை :  

முதலில் நண்டை ஓட்டை எடுத்து சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். தேங்காய், வேர்க்கடலை, கசகசா, முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், பொட்டுக் கடலை இவற்றை மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். குடமிளகாயை விதை நீக்கி 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் குடமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளவும். வதங்கியதும் அதில் நண்டை சேர்த்து மறுபடியும் வதக்கவும். நண்டு இலேசாக சிவந்ததும் கரைத்து வைத்தக் கலவையை ஊற்றி உப்பு போட்டு மூடி வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி கொத்த மல்லித் தூவவும். முதலில் நண்டை ஓட்டை எடுத்து சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். தேங்காய், வேர்க்கடலை, கசகசா, முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், பொட்டுக் கடலை இவற்றை மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த வற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். குடமிளகாயை விதை நீக்கி 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் குடமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளவும். வதங்கியதும் அதில் நண்டை சேர்த்து மறுபடியும் வதக்கவும். நண்டு இலேசாக சிவந்ததும் கரைத்து வைத்தக் கலவையை ஊற்றி உப்பு போட்டு மூடி வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி கொத்த மல்லித் தூவவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்