SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் கொத்து இடியாப்பம்

2022-07-29@ 17:45:47

தேவையான பொருட்கள்:

இடியாப்பம்  - 6
முட்டை - 2
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு
சிக்கன் துண்டுகள்
சிக்கன் கிரேவி - 1/2 கப்
கறிவேப்பிலை
கொத்துமல்லி தழை
கல் உப்பு
எண்ணெய்


செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானவுடன் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இந்த வதக்கிய கலவையில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும் இதனுடன் மிளகு தூள்,வேகவைத்த சிக்கன் துண்டுகள், இடியாப்பம், சிக்கன் கிரேவி சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும். சுவையான மற்றும் எளிமையான சிக்கன் கொத்து இடியாப்பம் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்