SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முருங்கைக்காய் கார குழம்பு

2022-07-26@ 18:04:40

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 8 பற்கள்
சிறிய வெங்காயம் - 1 கப்
கறிவேப்பிலை
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சாம்பார் தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்  
முருங்கைக்காய் - 2
கரைத்த புளி - 1/2 கப்


செய்முறை:

முருங்கைக்காய் கார குழம்பு செய்ய ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், வெந்தயம் சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் இதில் பூண்டு பற்கள், சிறிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பாரை தூள், தேவையான  அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து நறுக்கிய முருங்கைக்காயை சேர்த்து கரைத்த புளி, தேவையான அளவு தண்ணீர் கடாயை மூடி பத்து நிமிடம் கொதிக்கவிடவும். சுவையான மற்றும் நாவின் அரும்புகளை தூண்டக்கூடிய முருங்கைக்காய் கார குழம்பு தயார் .

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்