SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜவ்வரிசி கிச்சடி

2022-07-26@ 18:03:12

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
சீரகம்  - 1/2 தேக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
1/2 பழம் - எலுமிச்சை சாறு
கறிவேப்பிலை
கொத்துமல்லி தழை
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி


செய்முறை:

ஜவ்வரிசி கிச்சடி செய்ய ஜவ்வரிசையை தண்ணீர் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த ஜவ்வரிசியை வடிகட்டவும். அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் சீரகம், நறுக்கிய உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதக்கிய பின்பு இதில் ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கிளறவும். ஜவ்வரிசி வெந்தவுடன் இதில் எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும். ஆரோக்கியமான மற்றும் எளிமையான ஜவ்வரிசி கிச்சடி தயார் .

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்