SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெண்டைகாய் மோர் குழம்பு

2022-07-25@ 17:43:47

தேவையான பொருட்கள்:

வெண்டைகாய் - 50 கிராம்
 தயிர் - 2 கப்
கடுகு - 3/4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்  - 3
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய்

மசாலா விழுது தயாரிக்க


சிறிய வெங்காயம்  - 3
பச்சை மிளகாய்  -2
பூண்டு - 2 பற்கள்  
தேங்காய் - 2 மேசைக்கரண்டி  ( துருவியது )
மஞ்சள் தூள் - 1/2  தேக்கரண்டி
சீரகத்தூள் - 1  தேக்கரண்டி
தண்ணீர்


செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயை உப்பு சேர்த்து வறுக்கவும். மசாலா விழுது தயாரிக்க சிறிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், துருவிய தேங்காய் ,மஞ்சள் தூள், சீரகத்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் புளித்த தயிருடன் அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலக்கவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வறுத்த வெண்டைகாய், தயிர் கலவை மற்றும் உப்பு சேர்த்து சிறிது கொதிக்க விடவும். சுவையான மோர் குழம்பு தயார். இந்த மோர் குழம்பை சூடான சாதம் மற்றும் அப்பளம் சேர்த்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்