SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் கப்சா

2022-07-25@ 17:41:36

தேவையான பொருட்கள்:

கப்சா மசாலா தூள் செய்ய

தனியா - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 1 மேசைக்கரண்டி
கருப்பு ஏலக்காய் - 1 மேசைக்கரண்டி
சுக்கு - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 மேசைக்கரண்டி

சிக்கன் கப்சா செய்ய

நெய் - 3 தேக்கரண்டி
வெங்காயம் - 1 நறுக்கியது
பூண்டு - 10 பற்கள் நறுக்கியது
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கிராம்பு - 6
சிக்கன் தொடை - 2
கப்சா மசாலா தூள்
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
கேரட் - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
தக்காளி விழுது - 1 கப்
ஜாதிக்காய்
சுடு தண்ணீர் - 3 கப்
சிக்கன் ஸ்டாக் - 1 க்யூப்
பாஸ்மதி அரிசி - 1 கப்
காய்ந்த திராட்சை


செய்முறை:

கப்சா மசாலா தூள் செய்ய

கப்சா மசாலா தூள் அரைக்க மிக்ஸியில் தனியா, மிளகு, சோம்பு, கருப்பு ஏலக்காய், சுக்கு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தூளாக அரைத்துக்கொள்ளவும்.

சிக்கன் கப்சா செய்ய


பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து 7 நிமிடம் வதக்கவும். அடுத்து மிளகு, சீரகம், கிராம்பு சேர்த்து வதக்கி பின்பு சிக்கனில் சிறு சிறு கீறல்கள் போட்டு, சிக்கனை சேர்த்து வதக்கவும். சிக்கன் நிறம் மாறியதும் அதில் கப்சா மசாலா தூள் சேர்க்கவும். அடுத்து நறுக்கிய கேரட், தக்காளி சேர்த்து வதக்கி பின்பு உப்பு சேர்த்து கலந்துவிடவும். பிறகு தக்காளி விழுது, ஜாதிக்காய் சேர்க்கவும். அடுத்து சுடு தண்ணீர் மற்றும் சிக்கன் ஸ்டாக் சேர்க்கவும். பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 20 நிமிடம் வேகவிடவும். 10 நிமிடம் கழித்து சிக்கனை திருப்பி விட்டு, கப்சா மசாலா தூள் சேர்த்து கலந்து பாத்திரத்தை மூடி 10 நிமிடம் வேகவிடவும். அடுத்து அரிசியை கழுவி சேர்த்து, பின்பு காய்ந்த திராட்சை சேர்த்து பாத்திரத்தை மூடி அரிசியை வேகவிடவும். சிக்கன் கப்சா தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்