SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரகு பெசரட்டு

2022-07-13@ 17:37:10

தேவையானவை :

வரகு அரிசி - 1 கப்,
பச்சைப்பயறு - 1 கப்,
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
சீரகம் - 2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கியது,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - 1 தேக்கரண்டி,
வெங்காயம் - 2,
எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

பச்சைப்பயறு மற்றும் வரகு அரிசியைக் கழுவி வடிகட்டி 6 மணி நேரம் ஊற வைக்கவும். பிறக நன்றாக கழுவி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் மற்றும் உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து மிருதுவான பேஸ்ட்டாக அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, தேவையான தண்ணீரைச் சேர்த்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து, நன்றாக கலக்கவும். தோசை கல் சூடானதும் அதில் மாவை ஊற்றி, தோசைப் போல் வார்க்கவும். சிறிது எண்ணெய் சேர்த்து, இருபுறமும் நன்கு வேகவிடவும். வரகு பெசரட்டு தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்