SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாம்பழ மோர் குழம்பு

2022-07-12@ 17:56:10

தேவையானவை:

சிறிய மாம்பழங்கள் - 4, தயிர் - 1 கப்,
தேங்காய் - ½ மூடி,
பச்சை மிளகாய் - 3,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்,
உப்பு - தேவைக்கு,
தாளிக்க - தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - ½ டீஸ்பூன்,
சீரகம்,
வெந்தயம்,
ஓமம் - தலா ¼ டீஸ்பூன்,
வரமிளமாய் -அல்லது மோர் மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
மாம்பழம் வதக்க - நெய் - 2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்து தயிரில் கலக்கி சிறிது நீர் சேர்த்து கடைந்து கொள்ளவும். மாம்பழத்தை இருபுறமும் நன்றாக கீறிக் கொண்டு நெய் விட்டு வதக்கவும். கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதங்கிய மாம்பழத்துடன் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய், மோர்மிளகாய் கிள்ளிப் போட்டு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டவும். வித்தியாசமான ருசியுடன் மாம்பழ மோர்க்குழம்பு தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்