SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாங்கொட்டை மிளகு குழம்பு

2022-07-11@ 17:39:30

தேவையானவை:

காய்ந்த மாங்காய் துண்டுகள் - 12 (வெந்நீரில் 2 மணி நேரம் ஊறவிடவும்),
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு மாங்காய் துண்டுகளில் இருப்பதால் வேண்டாம். தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
வெல்லம்,
மஞ்சள் தூள்,
கடுகு - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது.

அரைக்க:


துவரம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 10,
உளுத்தம் பருப்பு,
மிளகு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிது,
எண்ணெய் - சிறிதளவு.


செய்முறை:

புளி, வெல்லம் தண்ணீரில் கரைத்து வடிகட்டி மஞ்சள் தூள் சேர்க்கவும். அரைக்கக் கொடுத்திருப்பதை எண்ணெயில் வறுத்து தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து புளி மற்றும் வெல்ல கரைசலை விடவும். ஒரு கொதி வந்தவுடன் ஊறிய மாங்காய் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து அரைத்த விழுதை கரைத்து விட்டு கட்டிகள் சேராமல் கிளறி விட்டு எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். இது ஜீரண குழம்பு. வயிறு மந்தமாக இருக்கும்போது, சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் வயிறும் பசி எடுக்கும். உடலுக்கும் நல்லது இந்த ‘பத்தியக்குழம்பு’.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்